திங்கள், டிசம்பர் 31, 2012

இந்திய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி விட்டது !

இந்தியாவின் தலைநகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இயக்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் K.M.ஷெரீஃப் : இளம்பெண்ணின் மரணம் இந்திய பெண்களின் பாதுகாப்பைக் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கொடூரமான இச்சம்பவத்தில் அரசுதான் முக்கிய பொறுப்பாளி. எல்லை மாநிலங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுவதில் குற்றம் புரிவது போலீசும், ராணுவமும் ஆகும். அனைத்து குற்றவாளிகளுக்கு பாடமாகும் விதமாக குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.



அன்னா ஹசாரே: டெல்லி மாணவி கற்பழிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வலியுறுத்தியும் அன்னா ஹசாரே, தனது சொந்தக் கிராமமான மராட்டிய மாநிலம், ராலேகான் சித்தியில் உள்ள கோவில் முன்பாக 28.12.2012 வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டம் தொடங்கினார். அதில் பேசிய அன்னா ஹசாரே, சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளில் கற்பழிப்பு குற்றத்துக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்து சட்டம் இயற்ற மத்திய அரசு தவறி விட்டது என குற்றம் சாட்டினார். 


இந்தியாவின் பொம்மை ஜனாதிபதி: இந்தியாவின் மிக தைரியமான மகள், அவள்தான் இந்தியாவின் ஹீரோ என்று மரணமடைந்த மாணவிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார். இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது.


டாக்டர் ராமதாஸ்: நள்ளிரவில் பெண்கள் எந்தவித அச்சமும், பாதிப்புமின்றி சுதந்திரமாக நடமாடும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று தான் இந்திய உண்மையான சுதந்திரம் அடைந்ததாக கருதமுடியும். இது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும். தில்லியில் மட்டுமின்றி, தமிழகத்திலும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. நேற்று திருப்பத்தூர் அருகில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



தோல்.திருமாவளவன்: இந்தியாவெங்கும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகள் காவல்துறை விசாரணை மட்டத்திலும் நீதிமன்றங்களிலும் பல்லாயிரக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. தாமதமாக வழங்கப்படும் நீதி, நீதியே அல்ல. மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடுமையான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும்கூட விரைந்து விசாரித்து நீதிவழங்காமலிருப்பது கண்டனத்துக்குரியது. 


சிந்திக்கவும்: இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.


இன்னும் குறிப்பாக சிற்றூர்களை  கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் நீதி கிடைப்பது என்பது இன்னும் அரிதாகும். பூர்வ பழங்குடிகள் என்று அரசாங்கத்தால் பட்டியல் படுத்தப்பட்டுள்ள இருளர் சமூகத்தைச் சேர்ந்த, கல்வியறிவற்ற கூலித் தொழிலாளியான விஜயா என்ற பெண், தனது 17 ஆவது வயதில் (1993ஆம் ஆண்டில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த 6 போலிஸ்  கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் எவரும் தண்டிக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.



கற்பழிப்பு குற்றம் செய்பவர்களை பொது இடத்தில் தலையை வெட்டினால் இதுபோன்ற குற்றத்தை இனி யாரும் செய்ய துணிய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக