அமெரிக்க அதிபர் ஒபாமாவின் டீன் ஏஜ் மகள் மாலியாக்கென புதிதாக செல்போனை கொடுத்து விட்டதாகவும் அந்த போனில் தன் மகளுக்கு எக்கச் சக்க இளைஞ்ர்களிடமிருந்து டேட்டிங் கேட்டு போன் மேல் போன் வந்தவண்ணம் இருப்பதாகவும் தந்தை ஒபாமாவும் தாயார் மிஷலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் வெள்ளை மாளிகையில் நேற்று ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர்.இந்த பேட்டியின்போது தங்களது 20 ஆண்டு
கால திருமண வாழ்க்கை குறித்தும் ஒபாமாவும், மிஷலும் பேசினர். அப்போது தனது மகள் மாலியா குறித்து மிச்செல் ஒபாமா கூறுகையில், “மகள் மாலியாவிற்கு ஒரு மொபைல் போனை நாங்கள் கொடுத்து இருக்கிறோம். எங்களுக்கு என்று சில வரைமுறைகளை வைத்து இருக்கிறோம். அதன்படி அவளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.ஆனால் அவர் யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை. இருந்தாலும் ‘நீண்ட கயிறு’ கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம். அதேசமயம், அதிபர் மாளிகையில் வசிப்பதால், செல்போன் பேச்சுக்கள் நிச்சயம் கண்காணிக்கப்படுவதை என் மகளும் அறிவாள்.
இப்போதைக்கு அவளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளோம்.நான் அவருடைய அறைக்குள் வருவதை அவர் ஒரு போதும் தெரிந்து கொள்ள முடியாது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது யாருடன் பேசுகிறாய்? பள்ளிப்பாடங்கள் குறித்து பேசுகிறாயா என்றெல்லாம் என் மகள் மாலியாவிடம் நான் கேட்பேனாக்கும்” என்றார்.
அதிபர் பராக் ஒபாமா கூறும்போது, “எனது குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். மகள் மாலியா தற்பொழுது இளைஞர்களிடமிருந்து போன் அழைப்புகளை பெறும் அளவிற்கான வயதை அடைந்துவிட்டாள். நாங்கள் ஒரு ரகசிய உளவு அமைப்பு போல நடந்து கொள்கிறோமா? எப்படி? என்று அவளிடம் நான் அடிக்கடி கேட்பேன்.
உங்களுடைய வாழ்க்கையின் கடுமையான நேரங்களை சந்திக்கிறபோது உங்களுக்குள் ஒரு மரியாதையும் அன்பும் அதிகரிப்பதை உணரமுடியும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக