புதன், டிசம்பர் 26, 2012

காங்கிரஸால் ஆசிர்வதிக்கப்பட்ட மோடி !

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.கவின் B  டீமாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதனாலேயே குஜராத்தில் மோடியால் ஜெயிக்க முடிந்திருக்கிறது.  குஜராத், கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சிந்தனைவாதிகள் மிகுந்து காணப்படுகின்றனர். இதனாலேயே குஜராத்தில் மீண்டும் மோடியால் ஜெயிக்க முடிந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஹிந்துத்துவா வலுவாக வேரூன்றி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதாவுக்கு மாற்று கட்சியாக திறம்பட செயல்பட முடியவில்லை. பாபர் மசூதி இடிப்பில் காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் எப்படி செயல்பட்டார் என்பது உலகறிந்த உண்மை. நரசிம்மராவ் ஹிந்துதுவாவினரிடம் பாபர் மசூதியை இடித்து அதில் கோவில் கேட்ட உதவி செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார் என்கிற செய்தி சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களாலேயே வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது. காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் மஹராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலைமை, மோடி ஆளும் குஜராத்திற்கு சமமாக உள்ளது. இவ்விரண்டு மாநிலங்களிலும் முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை அரசு சிறையில் அடைத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக