திங்கள், டிசம்பர் 31, 2012

பெற்றோரை கண்டுகொள்ளாத பிள்ளைகளுக்கு ஜெயில்: சீனாவில் புதிய சட்டம் !!

பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்குச் சிறை தண்டனை வழங்கும்விதத்தில் சிறப்புச் சட்டமொன்றை சீன அரசு அதிரடியாக கொண்டுவந்துள்ளது. சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை சட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் அங்கு வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேல் 16 கோடியே 70 லட்சம் பேரும், 80
வயதுக்கு மேல் 10 லட்சம் பேரும் உள்ளனர். மகனோ அல்லது மகளோ தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு சென்று பணி செய்வதால் இவர்கள் கவனிப்பாரற்றவர்களாகின்றனர். அன்பு, அரவணைப்பு மற்றும் ஆதரவின்றி அனாதைகளாக மரணம் அடைகின்றனர். இது சீனர்களின் கலாசார சீரழிவாக கருதப்படுகிறது.
எனவே, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் குழந்தைகள் தங்கள் பெற்றோரை கட்டாயம் நேரில் சென்று சந்திக்க வேண்டும். அவர்களை வாழ்நாள் முழுவதும் வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்களது இந்த கடமையை செய்ய தவறுபவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக