டெல்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள தொடர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பிற்பகல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில்
ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிகோரி கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. தொடர்ச்சியான போராட்டங்களும் அதை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கடந்த ஞாயிறன்று கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்துள்ள மோதல்கள் கவலையளிக்கின்றது. அந்த இளம்பெண்ணுக்கு டெல்லியில் ஏற்பட்ட இந்த கொடூரமான அனுபவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதில், நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இச்சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள கோபமும், ஆவேசமும் நியாயமானது. உண்மையானது. அந்த பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். இந்த இக்கட்டான நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் அவருடைய அன்பிற்குரியவர்களுக்காகவும் நாம் பிராத்தனை செய்வோம். இவ்விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றக் கூடும் என்று கூறப்படுகிறது

.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக