திங்கள், டிசம்பர் 24, 2012

2-வது நாளாக போர்க்களமான டெல்லி! சராமரியாக கண்ணீர்புகை குண்டுகள், தண்ணீர் பீய்சி அடிப்பு !

டெல்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் 2-வது நாளாக டெல்லி இந்தியா கேட் பகுதி போர்க்களமானது. டெல்லி இந்தியா கேட், ராஷ்டிரபதி பவன் ஆகியவற்றை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை பலமுறை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் கூட்டம் கலைக்கப்பட்டது. இருப்பினும் சிலர் இந்தியா கேட் பகுதியில் கொட்டும் பனியில் விடிய விடிய போராட்டம் நடத்தினர் .இன்று காலை அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டது. 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியா கேட் முன்பாக ஆயிரக்கணக்கானோர் கூடி ராஷ்டிரபதிபவனை முற்றுகையிட செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்களை முன்னேற விடாமல் போலீசாரும் அதிரடிப்படையினரும் தடுத்து நிறுத்தினர். பல முறை இன்றும் கண்ணீர்புகை குண்டுகள வீசப்பட்டன. தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதேபோல் நாடாளுமன்றம அருகே ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராம்லீலா மைதானப் போராட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். இதனிடையே போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக