செவ்வாய், டிசம்பர் 25, 2012

மீன்கள் அருங்காட்சியகத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த சுறா மீன் : 15 பேர் படுகாயம் ! (வீடியோ இணைப்பு)

சீனாவில் சாங்காய் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக மீன்கள் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. பெரிய கண்ணாடி தொட்டியில் பெரிய சுறா மீன்கள், சிறிய வகை வண்ணமீன்கள், ஆமைகள் போன்றவை வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களுக்கு நீச்சல் வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி உணவு வழங்குவார்கள். இப்படி உணவு வழங்கும் போது அதை ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர்.அப்போது கண்ணாடி தொட்டி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தண்ணீருடன் சுறா மீன்கள் வணிக வளாகத்திற்கு பாய்ந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கண்ணாடி துண்டுகள் குத்தி கிழித்ததில் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். 10 அங்குலம் தடிப்பு கொண்ட கண்ணாடி தொட்டி உடைந்தது எப்படி? என்பது மர்மமாக இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக