திங்கள், டிசம்பர் 24, 2012

உணவுக்காக நின்ற மக்கள் மீது வான் வழி தாக்குதல் நடத்திய சிரியா ராணுவத்தின் காட்டுமிராண்டி தனம் !

சிரியாவில் நேற்று வான்வழி தாக்குதலில் உணவுக்காக கியூவில் நின்றிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாலைகளின் நடுவில் உட்கார்ந்து அலறிய வீடியோ காட்சி வெளியானதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சிரியாவில் நேற்று, வான்வழியே குண்டுமழை பொழிந்து சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரட் உணவுகளை வாங்குவதற்காக
கியூவில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 200 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் காயம் அடைந்தனர்.இறந்தவர்களது உடல்கள் சாலைகளின் நடுவே, ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், சிரியாவின் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதைப்பார்த்த உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உலக மனித உரிமை கமிஷன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய ராணுவத்திற்கு மனித உரிமை கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக