சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது. இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் பலியாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதல்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த 12ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் படுகாயமடைந்தனர். இதில் உள்துறை அமைச்சர் முகமது அல்-ஷார் காயமின்றி தப்பியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த
குண்டு வெடிப்பில் அவர் காயம் அடைந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
குண்டு வெடிப்பில் அவர் காயம் அடைந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் நேற்று லெபனானிலுள்ள பெய்ரூட் நகருக்கு சென்றதாக லெபனான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நீடிக்கிறது.
அங்குள்ள ஹாமா மாகாணத்தில் 6 நகரங்களை பிடித்து விட்டதாக புரட்சிபடை உறுப்பினர் காசிம் தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் சில நகரங்கள் எங்களுடைய வசம் வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக