வியாழன், டிசம்பர் 20, 2012

மோடியின் வெற்றி மதசார்பின்மைக்கு கிடைத்த அடி !

குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு 20.12.2012 காலை தொடங்கியது. இதில் பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  இதன் மூலம் ஹிந்துத்துவா மோடி மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார். மோடி ஆட்சியை பிடித்திருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய அடி என்றே சொல்லலாம். ஹிந்துதுவாவுக்கு எதிரான மத சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், மற்றும் போலி கம்புனிஸ்ட்கள் போன்றோர்களின் உறுதியற்ற அரசியலின் விளைவாக பயங்கரவாதி மோடி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார். 

குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரத்தை முதல்வராக இருந்து கொண்டு இவரே திட்டமிட்டு நடத்தினார். இதில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், கூட்டம் கூட்டமாக முஸ்லிம் மக்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர். இதனாலேயே அமெரிக்கா மோடிக்கு விசா கொடுக்க மறுத்தது. இப்படிபட்ட உலகறிந்த ஹிட்லரை போன்ற பாசிச சிந்தனை கொண்ட ஒருவர் மீண்டும் முதல்வராகி இருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய தோல்வி என்றே சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக