டெல்லி கௌசியா காலனியில், கடந்த 10 நாட்களுக்கு முன் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டித்தரக்கோரியும், துரத்தியடிக்கப்பட்ட மக்களை "மீள் குடியமர்த்த"க்கோரியும், முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட, போராளிகளிடம் சரணடைந்தார், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித். முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு, அங்கேயே "ஜும்ஆ" தொழுகை நிறைவேற்றும் வகையில், வேகமாக செயல்பட்ட போராட்டக்குழுவினரை
அழைத்துப்பேசிய முதல்வர், இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டிக்கொடுப்பதாக வாக்களித்ததுடன், துரத்தியடிக்கப்பட்ட மக்கள், மீண்டும் "மீள் குடியமர்த்தப்பட" தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்.
முதல்வரை சந்தித்த, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஹாபிஸ் மன்சூர், கௌசியா காலனி கன்வீனர் அலாவுத்தீன், மற்றும் தன்வீர் ஆகியோர், பள்ளியை இடித்த அதிகாரிகள், மக்களை அலைக்கழித்த காவலர்கள் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், எனவும் வலியுறுத்தினர்.
அனைத்து கோரிக்கைகளையும் செவிமடுத்த முதல்வர் ஷீலா தீட்சித், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வக்ப் வாரியத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் மற்றும் அதை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான குடியிருப்புக்களையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம், நிர்மூலமாக்கி விட்டு, மக்களை மிரட்டி வந்த Delhi Devolepment Authority "DDA"வின் அடக்குமுறைகளுக்கெதிராக பொங்கியெழுந்த மக்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட அமைப்புக்களுடன் இணைந்து, தொடர் போராட்டங்கள் நடத்தியதையடுத்து, தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக