வெள்ளி, டிசம்பர் 21, 2012

மோடியின் 7 அமைச்சர்கள் மண்ணைக் கவ்வினர் !

அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதும், முதல்வர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 7 அமைச்சர்களுக்குத் தோல்வி கிடைத்துள்ளது. குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வாங்கிய சீட்களை விட 2 சீட்களே குறைவாக பெற்றுள்ள போதிலும் மோடியின் வெற்றி பாஜகவைப் பொறுத்தவரை பெரிய விஷயம்தான்.  அதேசமயம் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 7 பேருக்கு இந்தத் தேர்தலில் தோல்வி கிடைத்துள்ளது. அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர். வேளாண்மைத் துறை அமைச்சர் திலீப் சங்கானி, சுகாதாரத் துறை அமைச்சர் ஜெயநாராயண் வியாஸ், சமூ்க நீதி அமைச்சர் ஃபகிர்பாய் வகேலா ஆகியே கேபினட் அமைச்சர்களும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரித் சிங் ராணா, வேளாண்மைத்துறையின் கனுபாய் பலாலா, உள்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், கல்வித்துறை அமைச்சர் ஜெய்சிங் செளகான் ஆகிய இணை அமைச்சர்களும் தோல்வியைத் தழுவியவர்கள் ஆவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக