
இந்த மனு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக அரசு சிறப்பு வழக்கறிஞர் இன்பதுரை ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில்,
"துப்பாக்கி படம் வெளியானதும், முஸ்லிம்கள் படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கோரி போராட்டம் நடத்தினர். முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர். உடனே முதல்வர் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அந்த காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுத்தார். இதற்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்தனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரினார்.
அரசு வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், "படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதா என்பது குறித்து ஜனவரி 3ம் தேதி அரசு பதில் அளிக்க வேண்டும்" என்று கூறி, இது தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக