சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 20 மாதங்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதையொட்டி ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவின் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுடன் புரட்சி படையும் சேர்ந்து ராணுவத்தை எதிர்த்து
போரிட்டு வருகிறது. எனினும், அதிபர் பஷர் அல் - ஆசாத் பணியாமல் பதவி விலக மறுத்து வருகிறார். இந்த நிலையில், தங்கள் உரிமைக்காக போராடும் மக்களுக்கும், புரட்சி படைக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், சிரியாவில் நடந்து வரும் மக்கள் புரட்சியை 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிப்பதாகவும், அதிபர் பஷார் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க ராணுவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை மந்திரி, லாரன்ட் பேபியஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக