புதன், ஜூலை 06, 2011

நொய்டா:நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

map_01 புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் க்ரேட்டர் நொய்டாவில் ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களை பில்டேர்ஸிற்கு வழங்கக்கூடாது எனவும், விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிலங்களை கையகப்படுத்திய மாநில அரசின் நடவடிக்கையை ரத்துச்செய்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உச்சநீதிமன்றம் உறுதிச்செய்து உத்தரவிட்டது.
நிலத்தை கையகப்படுத்துவதில் அனைத்து சட்டங்களையும் மீறி க்ரேட்டர் நொய்டா தொழில்துறை ஆணையம் கட்டிட நிர்மாண உரிமையாளர்களுக்காக செயல்படுவதாக இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எ.கெ.கங்கூலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் உத்தரவில் தெரிவித்துள்ளது.

நிலங்களை கையகப்படுத்திய க்ரேட்டர் நொய்டா தொழில்துறை ஆணையம் 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து க்ரேட்டர் நொய்டா தொழில்துறை ஆணையமும், உ.பி மாநில ரியல் எஸ்டேட் டெவலப்பேர்ஸ் அண்ட் பில்டர்ஸும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
விவசாயிகளிடமிருந்தும், கிராமவாசிகளிடமிருந்தும் 156 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசின் கீழ் செயல்படும் க்ரேட்டர் நொய்டா தொழில்துறை ஆணையம் கையகப்படுத்தியது. இதற்கு எதிராக நொய்டா விவசாயிகள் தீவிரமான போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மாயாவதியின் தலைமையிலான உ.பி அரசு காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்தது.விவசாயிகள் போராட்டத்தின்போது பலர் கொல்லப்பட்டனர்.
thoothu online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக