ஞாயிறு, ஜூலை 10, 2011

பெர்சே 2.0 ஆர்பாட்டத்தின் காரணமாக கோலாலம்பூர் மாநகரம் ஸ்தம்பித்தது...

தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரி மலேசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடக்கம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டனர்.

கலவரங்களை அடக்குவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு பிரயோகம், தடியடி என்பவற்றை பிரயோகித்து வருகின்றனர். சுமார் 600க்கு மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் தலைநகர் கோலாலம்பூர் மற்றும் பிறபகுதிகளில் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் சுயேட்சையானதா?
அது மக்களின் நம்பிக்கை பெற்றுள்ளதா?
மக்களின் வாக்களிப்பின் வழி தங்களது ஜனநாயகத்தை உணர முடிகிறார்களா? அல்லது நமது நாடு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஓர் குறிப்பிட்ட குழுக்களின் ஆதிக்கத்தில், அதிகாரத்தில் செயற்படுகிறதா?
என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் கோஷமெழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ள பெர்சே 2.0 அமைப்பினர், இன்று பிற்பகல் 2 மணிக்கு மெர்டேக்கா அரங்கத்தில் கூடினர்.

கோலாலம்பூர் நகரை சுற்றி வெளியில் தடைகள் கூடுதலாக போடப்பட்டிருப்பதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் முனைந்து வருவதாகவும், காலையிலிருந்து அங்கு வான் பரப்பில் ஹெலிகாப்டர்கள் சுற்றி சுற்றி பறந்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து  நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதக்கடத்தலை தடுப்பதற்காக சாலைத்தடுப்புக்களை அமைத்து வருகிறோம் என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மலேசிய காவற்துறையினர் அறிவித்திருந்தனர். எனினும் அது இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவே எனவும்,  இவ்வார கடைசியில் (சனி,ஞாயிறு தினங்களில்) வெளிலியிருந்து கோலாலம்பூருக்கு பேருந்துக்கள் நுழைய தற்காலிக அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டதன் பின்னணியும் இதுவே எனவும் நிருபர்கள் கூறினர்.

சட்டவிரோதமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என அவர்களை எச்சரித்த போதும்,  நேற்று நள்ளிரவு முதலே தெருக்களில் சுமார் 10,000 ஆர்ப்பாட்ட காரர்கள் ஒன்று கூடியுள்ளனர். மெர்டேக்கா சதுக்கத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலை நோக்கி இன்று காலை 1500 க்கு மேற்பட்டோர் பேரணி நடத்திச்சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியால் மலேசிய தலைநகரில் அமைந்துள்ள பிரதான வர்த்தக சுற்றுலா தளமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் (Twin towers) மூடப்பட்டுள்ளது. மேலும் தலைநகரில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள் ஆர்ப்பாட்ட மோதல்களில் சிக்குவதை தவிர்த்துக்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்பட்டனர்.

அவ்வாறு வெளியில் வருவோர் சிவப்பு, மஞ்சள் நிற சீருடை (ஆர்ப்பாட்ட காரர்களின் சீருடை நிறம்) அணிவதை தவிர்க்கும் படி கோரப்பட்டனர்.

ஆர்ப்பாட்ட படங்கள்




படங்கள் - மலேசியாகினி, த சண்டே டெய்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக