கெய்ரோ:அரசியல் சாசன உருவாக்கத்திற்கு முக்கிய அடிப்படையாக ஷரீஅத்தின் தத்துவங்கள் தொடரும் என்று எகிப்தின் அரசியல் நிர்ணய சபை முடிவுச் செய்துள்ளது. முந்தைய அரசியல் சாசனத்தில் தொடரும் ஷரீஅத் தொடர்பான வார்த்தையை நீக்க தேவையில்லை என்று முடிவு
எடுக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில் இஸ்லாமிய வாதிகளுக்கும், மதசார்பற்றவாதிகளுக்கும் இடையே கடுமையான சர்ச்சையை இவ்விவகாரம் கிளப்பியிருந்தது. அரசியல் சாசன வரைவில் 234 துணப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு பூர்த்தியான பிறகு அங்கீகாரத்திற்காக அதிபர் முர்ஸியிடம் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து முர்ஸி, அதனை மக்கள் விருப்ப வாக்கெடுப்புக்கு விடுவார். அரசியல் சாசன இறுதி வரைவின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான அரசியல் சாசன தயாரிப்புக் குழுவின் கூட்டம் நேற்று துவங்கியது.
அரசியல் சாசன வாக்கெடுப்பு பூர்த்தியான பிறகே அதிகார பதவிகள் தொடர்பாக முர்ஸிக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக