திங்கள், நவம்பர் 26, 2012

அஸ்ஸாம் அகதிகளுக்கு தொடரும் ரிஹாபின் சேவை !

புதுடெல்லி:ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், அஸ்ஸாம் அகதிகள் முகாம்களில் நிவாரண உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. சிராங், துப்ரி, கொக்ராஜர், பேர்பட்டா மாவட்டங்களில் உள்ள 58 அகதிகள் முகாம்களில் உள்ள 56,644 பேருக்கு 22,59,701 ரூபாய் மதிப்புடைய நிவாரண உதவிகளை ரிஹாப் வழங்கியது. இந்த உதவிகளை வழங்கும் பணிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான்
தலைமை தாங்கினார். கடந்த 3 தடவையாக 23,330 குடும்பங்களுக்கு காட்டன் சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உணவு வகைகள், கொசு வலை, தார்ப்பாய், ப்ளாஸ்டிக் பக்கெட், மக், பாத்திரங்கள் ஆகியன ரிஹாப் சார்பில் விநியோகிக்கப்பட்டன. மேலும் அகதிகள் முகாம்களில் 9.7 லட்சம் ரூபாய் செலவில் மொபைல் மெடிக்கல் யூனிட்டும் ரிஹாப் சார்பாக சேவையில் ஈடுபட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக