வெள்ளி, நவம்பர் 23, 2012

கூடங்குளம் கழிவுகளை புதைக்க கர்நாடகத்தில் எதிர்ப்பு- கோலாரில் நாளை பந்த் !

பெங்களூர்: கோலார் தங்கவயலில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமிக்க கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை கண்டித்து நாளை கோலார் தங்கவயலில் பந்த் நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் நரிமன், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள்
பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டன. கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முடிவு செய்திருக்கிறது என்றார். கோலார் தங்கவயலில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமிக்க கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் இருந்து அணுக் கழிவுகளை இங்கே கொண்டு வந்து சேமிப்பதா என்று கோலார் தங்கவயல் மக்கள் கடுப்பாகியுள்ளனர்.
இதையடுத்து அணுக் கழிவுகளை சேமிக்கும் திட்டத்தை எதிர்த்து கோலார் தங்கவயலில் நாளை பந்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த பந்திற்கு அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள், பொது மக்கள், சுரங்கத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே பிரச்சனை இருக்கையில் தற்போது கூடங்குளம் அணுக் கழிவை சேமிப்பதும் சேர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அணுக் கழிவுகளை புதைக்க திட்டமிடப்படும் கோலாரில் பெரும்பான்மையாக வசிப்பது தமிழர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக