வெள்ளி, நவம்பர் 01, 2013

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் அமைய பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பிரச்சாரம் துவக்கம்!

பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு கூட்டம் அக் 30 அன்று சென்னையில் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இக்கூட்டத்தில் பொது செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர்கள் ஜே.முஹம்மது ரசீன் மற்றும் எஸ்.இலியாஸ், பொருளாளர் ஆரிஃப் பைசல் மற்றும் பிற செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானங்கள்:
1) மக்களிடையே ஆரோக்கியமான வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ‘ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்‘ என்ற பிரச்சாரத்தை தேசிய அளவில் செய்து வருகிறது. இவ்வருடத்தில் இந்த பிரச்சாரம் நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியாக நவம்பர் 3 ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் மினி மாராத்தான் ஓட்டமும் அதனை தொடர்ந்து யோகா பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளது. மாநிலத்தில் பரவலாக பல இடங்களில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி யோகா மற்றும் உடல் பயிற்சிகள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் பயிற்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பொது மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது உடல் ஆரோக்கியத்தை செம்மை படுத்தி வலிமையான தேசம் உருவாக வலு சேர்க்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.
2) பாபர் மசூதி இடிப்பு என்பது வெறுமனே முஸ்லிம்களின் பிரச்சனை மாத்திரம் அல்ல. மாறாக அது அனைத்து இந்திய குடிமகனின் பிரச்சனையாகும். சகோதர வாஞ்சையுடன் பழகி வந்த மக்களிடையே பல காலம் திட்டமிட்டு மத துவேஷம் பரப்பப்பட்டு மத கலவரங்களை நடத்தி நமது நாட்டின் மதசார்பின்மையை மாய்த்துவிட்டு நிகழ்ந்த சம்பவமே பாபர் மசூதி இடிப்பு. பாபர் மசூதியை இடித்தவர்கள் நமது நாட்டு மதசார்ப்பின்மையை ஏற்று கொள்ளாதவர்கள். எனவே அவர்களது சதியை வீழ்த்தி மதசார்பின்மையை தூக்கி பிடிப்பது நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் பரவலாக கருத்தரங்கம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது என்று பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது
3) பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி 45 பேர் இறந்த செய்தி மாநில செயற்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது. இரவில் இயக்கப்படும் பேருந்துகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்களா என்றும் பேருந்து ஓட்டுனர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்கப்படுகிறதா போன்ற பொதுவான அவசியம் பேன வேண்டிய நடைமுறைகளை அரசு அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். குறிப்பாக பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போதிய அனுபவம் இல்லாத ஓட்டுனர்களை தற்காலிகமாக நியமிப்பது, பழுதடைந்த வாகனங்கள் மற்றும் பெர்மிட் இல்லாத வாகனங்களை இயக்குவது போன்ற முறைகேடுகள் சகஜமாக நடந்து வருகிறது. இது போன்ற முறைகேடுகளை அரசு உடனடியாக கவனித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
4) தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல் மற்றும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் பிரச்சார இயக்கம் தொடங்கி அக்டோபர் 6-ந்தேதி அன்று சிறைநிரப்பும் போராட்டம் சென்னையிலும், மதுரையிலும் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சமுதாய தலைவர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் இச்செயற்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.
இப்படிக்கு
ஏ.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர் ,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக