திங்கள், நவம்பர் 04, 2013

சகுந்தலா தேவி: ஒரு இந்தியக் கணித மேதை...

சகுந்தலா தேவி (நவம்பர் 4, 1929 - ஏப்ரல் 21, 2013) 

ஒரு இந்தியக் கணித மேதை. பெங்களூரில் பிறந்த அவரது தந்தை சர்க்கஸ் இல் பணிபுரிந்தார். 


அவருக்கு மூன்று வயது இருந்த போது, அவரது தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்த பொழுதே அவரது கணிதத் திறன் புலப்பட்டது. 

அவருக்கு ஆறு வயது இருந்த போது மைசூர் பல்கலைக்கழகத்தில் அவரது கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை வெளிப்படுத்தினார். எட்டு வயதில் அவர் அதையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்து வெற்றி பெற்றார். 

1977ல் அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை கணக்கிட்டார். இதை யூனிவாக்-1108 என்ற கணினியை விட 12 வினாடிகள் விரைவாக செய்து முடித்தார்.

இவர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 21 ஏப்ரல், 2013 அன்று பெங்களூருவில் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக