வெள்ளி, நவம்பர் 01, 2013

ஜனநாயகவாதிகளை ஆதரித்த எகிப்து குங்ஃபூ வீரரின் பதக்கம் பறிப்பு!

எகிப்தின் ஜனநாயக போராட்டத்தை ஆதரிக்கும் ராபிஆ சின்னம் பொறித்த டீசர்ட் அணிந்த எகிப்தின் குங்ஃபூ வீரருக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தை சர்வாதிகார ராணுவ அரசு பறித்துள்ளது. ரஷ்யாவில் நடந்த குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில், எகிப்தின் ஜனநாயக போராட்டத்தை ஆதரிக்கும் ராபிஆ சின்னம் பொறித்த டீ சர்ட்டை அணிந்து அதன் மீது தங்கப்பதக்கத்தை அணிந்திருந்த குங்ஃபூ வீரர் முஹம்மது யூசுஃபிற்கு கிடைத்த பதக்கத்தை தான் சர்வாதிகார ராணுவ அரசு பறித்துள்ளது.

முஹம்மது யூசுஃபின் ஜனநாயக போராட்ட ஆதரவு இராணுவ அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடக்கவிருக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் முஹம்மது யூசுஃப் கலந்துகொள்வதையும் ராணுவ அரசு தடைச் செய்துள்ளது.
எகிப்தில் கருத்து சுதந்திரத்திற்கு ராணுவம் கடுமையான கட்டுப்பாட்டை விதிக்க உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது என்று பி.பி.சி தெரிவிக்கிறது.
ராணுவ சர்வாதிகார அரசின் தலைவர் அப்துல் ஃபத்தாஹ் அல் ஸீஸியை கிண்டலடித்த பிரபல டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பஸ்ஸிம் யூசுஃப் மீதான ராணுவ சர்வாதிகார அரசின் விசாரணை துவங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக