ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் இழந்துள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை யுனெஸ்கோ அமைப்பு உறுப்பினராக இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த அமைப்புக்கு அளித்துவந்த நிதியுதவியை நிறுத்தின. இதன் காரணமாக, கடும் நிதிச்சுமையில் சிக்கித் தவித்த யுனெஸ்கோ அமைப்பில், பலர் வேலை இழந்தனர்.
யுனெஸ்கோ விதிகளின்படி, அமெரிக்காவும், இஸ்ரேலும் நிதியைச் செலுத்தி வாக்குரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இரு நாடுகளிடமிருந்தும் நிதி அளிப்பது தொடர்பான, உரிய ஆவணங்கள் பெறப்படாததால், விதிகளின்படி வெள்ளிக்கிழமையோடு அந்நாடுகளின் வாக்களிக்கும் உரிமை தானாகவே ரத்தாகியுள்ளதாக யுனெஸ்கோ வட்டாரம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக