புதன், நவம்பர் 06, 2013

இஸ்லாமிய புரட்சியின் நினைவு தினம்:ஈரானில் அமெரிக்காவிற்கு எதிராக பேரணி!

டெஹ்ரான்: இஸ்லாமிய புரட்சியின் போது ஈரானில் அமெரிக்க தூதரகம் கட்டுக்குள் கொண்டுவந்ததை நினைவுக்கூறும் 34-வது ஆண்டு நினைவு தினத்தில் ஈரானில் அமெரிக்க எதிர்ப்பு எதிர்ப்பு பேரணிகள் நடந்துள்ளன.டெஹ்ரானில் முன்னாள் அமெரிக்க தூதரக கட்டிடம் முன்பாக முக்கிய பேரணி நடந்தது.


’அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அழிவு உண்டாகட்டும்’ என்று முழக்கத்தை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.அமெரிக்க, இஸ்ரேல் கொடிகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் எரித்தனர்.அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டன.லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
பலவருடங்களுக்கு பிறகு இவ்வளவு பிரம்மாண்டமான பேரணி முதன் முறையாக ஈரானில் நடந்துள்ளது.அமெரிக்கா-ஈரான் இடையே தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் துவங்கவிருக்கும் வேளையில் பிரம்மாண்டமான எதிர்ப்பு பேரணி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.1979-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி ஈரான் போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பணியாளர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.52 பணியாளர்களை 444 தினங்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த இச்சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கா-ஈரான் இடையே தூதரக உறவு முறிந்துபோனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக