திங்கள், நவம்பர் 04, 2013

முஹர்ரம் எமது வாழ்வில் புத்தாக்கம் செலுத்திட ....!

இன்று யூத கிறிஸ்தவர்கள் தமது புதுவருடத்தின் ஆரம்ப மாதமாக ஜனவரி மாதத்தை அடிப்படையாக கொண்டு உலகினது அனைத்து விவகாரங்களையும் குறிப்பிடும் “கலன்டரை” கொண்டிருப்பதாலும் அது இன்றைய முதலாளித்துவ அரசினால் அமுல்படுத்தப்படுவதாலும் முஸ்லிம்களாகிய நாம் “எமது வருடக் கணிப்பாகிய முஹர்ரத்தை” எமது “புதுவருடமாக கணித்து” வாழ்வினது விவகாரங்களை ஒழுங்குபடுத்த தவறிவிடுவதுடன் அதுபற்றிய எத்தகைய எண்ணமும் முக்கியத்துவமும் எமது இளம் சந்ததிகளிடம் இல்லாமல் இருப்பதனை காணமுடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் “தாருல் குப்ரில் இருந்து” “தாருல் இஸ்லாத்தை” நிறுவுவதற்கு மக்காவிலிருந்து மதீனாவிற்கு மேற்கொண்ட ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டு அனைத்து ஸகாபாக்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு பிரகடனப்படுத்திய இஸ்லாமிய முதல் மாதமாக முஹர்ரம் திகழ்வதனை நாம் காணலாம்.

ஆகவே இந்த முஹர்ரம் எமக்கு விடுக்கும் மிகப்பெரிய செய்தியாக தாருல் இஸ்லாம் எனும் “இஸ்லாம் ஆட்சி செய்யப்பட வேண்டிய தேசம் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைகிறது”.

அத்தகைய தாருல் இஸ்லாத்தை நிறுவுவதற்கான “நுஸ்றாவை” இன்று முஸ்லிம் உலகு இழந்து பல்வேறு வகையான அழிவுகளை சந்திப்பதுடன் முஸ்லிம்களது கண்ணியம் பறிக்கப்படுவதுடன் அவர்களது உடல், உயிர் என்பவற்றிற்கு பெறுமானம் இன்றிய நிலை காணப்படுகிறது.

எனவே, இன்று தாருல் இஸ்லாத்தினை நிறுவிடத் தேவையான இஸ்லாத்தினது ஒரே தலைமையை கொண்ட “கிலாபா அரசினை” நிறுவுவதற்கு தடையாக இன்று முஸ்லிம் உம்மத்தினது பாதுகாப்பு அரணாகிய “முஸ்லிம் இராணுவம்” மேற்கினாலும் அமெரிக்காவினாலும் “துஸ்பிரயோகம் செய்யப்பட்டு” முஸ்லிம்களை நசுக்கவும்; அடக்கவும் இஸ்லாம் எழுச்சி பெறுவதனை தடுக்கவும்; பயன்படுத்தப்படும் துர்பாக்கிய நிலையில் இருந்து முஸ்லிம் உம்மத் மீள வேண்டும்.

முஸ்லிம்களது எழுச்சியை தாமதப்படுத்த அல்லது தடைசெய்ய இன்றைய மேற்கினது “பிரித்தாளும் தந்திரோபாய முறை” மூலம் இன்றை முஸ்லிம் ஆட்சியாளர்கள் பயன்படுத்தப்படும் துர்பாக்கிய நிலையில் முஸ்லிம் உம்மத் உள்ளது.

முஸ்லிம்களை தொடர்ந்தும் தேசிய எல்லைக்குள் வரையறுத்து நபி (ஸல்) அவர்கள் ஹறாமாக்கிய “தேசியவாதச் சிந்தனைக்குள் பிணைக்கும்” நிலை மாறி முஸ்லிம் உம்மத் “சகோதரத்துவ சிந்தனையானல்” ஒன்றிணைக்கப்பட்டு நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எவ்வாறானதொரு சகோதரத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி ஹிஜ்ரத் செய்து வந்த சக முஸ்லிம்களை “சொந்த சகோதர கண்ணியத்தையும் சம உரிமையையும் கொடுத்து” இஸ்லாத்திற்கு உரம் சேர்த்து எதிரிகளை எதிர்கொள்ள அந்த சகோதரத்துவத்தை பயன்படுத்தினார்கள் என்பதனை நாம் உணர வேண்டும்.

“அச்சகோதரத்துவம்” இஸ்லாம் மதீனாவினுல் அமுலாக்கப்படுவதற்கும், எதிரிகளை எதிர்கொள்வதற்கும், இஸ்லாம் உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்லப்படுவதற்கும் எவ்வாறு வழி வகுத்தது என்பதனை நாம் இத்தருணத்தில் சிந்திக்க கடமைப்பட்டுளோம்.

அத்துடன் யூத கிறிஸ்தவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் மாறு செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் எம்மை பணித்திருந்த போதிலும் அதனை serious ஆக உணராமல் “யூத நசாராக்களது” அகீதாவுடன் தொடர்பான மதஒதுக்கல் சிந்தனையின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட உலக ஒழுங்கினது தாக்கத்திற்குட்பட்டவர்களாக நம்மில் அநேகர் இருப்பது மிகப்பெரிய கைசேதம் என்பதனையும் நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில் அவர்கள் மதத்தை பொதுவாழ்வில் பிரயோகிப்பதில்லை. பொதுவாழ்வொழுங்கை தீர்மானிப்பது “முதலாளித்துவ அரசும்” அவ்வரசினை கட்டியாளும் “சிந்தனையாளர்களும்” என்பதனை நாம் உணரவேண்டும். இதன் பாதிப்பை எமது சிறுவர் மற்றும் இளைஞர்களது கல்வி முதல் பொதுவாழ்வில் அவர்களை கவரும் கலாச்சாரப் படையெடுப்பு வரை நாம் தெளிவாக காணமுடியுமாக உள்ளது.

ஆதலால், எமது அகீதா வாழ்வில் எழும் அனைத்து துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்குமான தீர்வை “குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட ஷரீஆவில்” வைத்துள்ளதால் அந்த ஷரீஆவை முழுமையாக நடைமுறைப்படுத்து தேவையான இஸ்லாமிய அரசு இன்று இல்லாத துர்பாக்கிய நிலையில் எமது உம்மத் உள்ளது என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக