சட்டசபை தீர்மானம்:தமிழக அரசுக்கு நன்றி!
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டமும் வெற்றிபெற்றுள்ளது. இரயில் மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கேற்று ஆதரவளித்த அனைத்து தரப்பினர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்கிறது. தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
அதேநேரம் தஞ்சையில் நீதிமன்ற அனுமதியுடன் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவர்கள் காவல்துரையால் இடிக்கப்பட்டதும், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் பழ.நெடுமாறன் போன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதும் ஏற்கத்தக்கதல்ல.
தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு கைது செய்யப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவும், நினைவு முற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இப்படிக்கு
I.உஸ்மான் கான்
மாநில செய்தி ஊடக பொறுப்பாளர்
எஸ்.டி.பி.ஐ கட்சி, தமிழ்நாடு,
தொடர்புக்கு-9443310150
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக