வெள்ளி, நவம்பர் 01, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய எந்த தகவல்களையும் ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என தேசிய புலனாய்வு அமைப்புகளான IB மற்றும் NIA மறுப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத இயக்கம் என சித்தரித்து எந்த தகவல்களையும், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என்று புலனாய்வு அமைப்புகளான IB (Intelligence Bureau)மற்றும் NIA (NationalInvestigation Agency) மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India - PCI) அனுப்பிய நோட்டிசுக்கு பதில் அளித்துள்ள புலனாய்வு அமைப்புகள், பாப்புலர் ஃப்ரண்டை தீவிரவாத இயக்கமென சில பத்திரிக்கைகள் கூறுவது போல் எந்த ஒரு தகவலும் தங்களிடம் இல்லை என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


கடந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்டை தீவிரவாத செயல்களில் தொடர்புபடுத்தி ஹிந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. இது பற்றி இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார் செய்யப்பட்டது. ஏசியன் ஏஜ் , டெக்கான் ஹெரால்ட், தி சண்டே கார்டியன், மற்றும் பயானியர் போன்ற இந்துத்வா அனுதாபி நாளிதழ்கள் "பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும், தலித்துகள் , மாவோயிஸ்ட்கள் மற்றும் மனித உரிமை குழுக்களோடு உறவு கொண்டாட முயற்சித்து கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தி செய்திகள் வெளியிட்டு இருந்தன.

இது பற்றிய 10 புகார்களில் 5 புகார்கள் கடந்த ஜூலை மாதம் தீர்த்து வைக்கப்பட்டது. சில பத்திரிகைகள்,IB மற்றும் NIA போன்ற புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே தாங்கள் செய்திகள் வெளியிட்டதாக கூறியிருந்தனர். இதை உறுதி செய்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்று விளக்கம் கேட்டு இரண்டு புலனாய்வு அமைப்புகளுக்கும் பிரஸ் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது. திங்கள் கிழமை அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது IB சார்பாக ஆஜர் ஆன உள்துறை செயலாளர் VK உபாத்யாயா அவர்கள் , செய்தி தாள்களின் கூற்றுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து ஒரு விளக்க அறிக்கையை தாக்கல் செய்தார் .இதே போன்று தேசிய புலனாய்வு அமைப்பான NIA வும் , தாங்கள் எந்த ஒரு பிரத்யேகமான தகவல்களையும் செய்தி தாள்களோடு பகிர்ந்து கொள்வதில்லை என்று ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.

சண்டே கார்டியன் பத்திரிக்கை மட்டும் தொடர்ந்து தாங்கள், புலனாய்வு அமைப்புகளின் தகவல் படி, செய்தி வெளியிட்டதாக வாதாடி சிக்கி கொண்டது . உடனே பிரஸ் கவுன்சில் சேர்மன் நீதியரசர் மர்கண்டேய கட்சு , குறிப்பிட்ட பத்திரிகையை, அவர்களுடைய வாதத்தின் அடிப்படையை தெரிவிக்குமாறும், அல்லது புலனாய்வு அமைப்புகளின் மறுப்பு அறிக்கைகளை பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு கேட்டு கொண்டார். 

தங்களுடைய நிலைபாட்டை தெளிவுபடுத்த உத்தரவு இடுவது கவுன்சிலின் வேலை இல்லை என்று குறுப்பிட்ட கட்ஜூ , உண்மை நிலைகளை விளக்கி தகவல்கள் வெளியிடுவது பத்திரிக்கையின் கடமை என்று கூறினார். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆஜர் ஆன வக்கீல்கள் " பாப்புலர் ஃப்ரண்ட், சமுக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடு பட்டு கொண்டிருக்க கூடிய ஒரு இயக்கம் எனவும், உத்தரகண்ட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக, 10 லட்சம் ரூபாய் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கியதை சுட்டி கண்பித்தனர். வாதத்தை கேட்ட நீதியரசர் கட்ஜூ , " ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்காக ஒட்டு மொத்த அமைப்பையும் குற்றம் சாட்டுவது அழகல்ல என கூறினார். சம்பந்தப்பட்ட செய்திதாள்களோடு தகவல்களை பரிமாறவில்லை என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதால் , அவர்களுடைய மறுப்பு அறிக்கைகளை வெளியிட வேண்டும் என, பிரஸ் கவுன்சில் , சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு உத்தரவு இட்டது.

"தி ஏசியன் ஏஜ்" பத்திரிகை மறுப்பு செய்தியை வெளியிடுவதாக ஒப்பு கொண்ட போதிலும் , மற்ற இரண்டு பத்திரிக்கைகளும் தங்களுடைய நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விட்டுத்தான் முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தனர். மேலும் நீதியரசர் கட்ஜூ"டைனிக் ஜாகரன்" (மீரட்) , டைனிக் ஜாகரன்(டெல்லி) ஆகிய பத்திரிக்கைகளை , பாப்புலர் ஃப்ரண்ட் தீவிரவாத இயக்கம் அல்ல என செய்தி வெளியிடுமாறு கேட்டு கொண்டார். இதன் விரிவான இறுதி தீர்ப்பு , கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும். பாப்புலர் ஃப்ரண்ட் புகார் தெரிவித்திருந்த ஏனைய பத்திரிக்கைகளான "இன்குலாப்" , "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்", "நவபாரத் டைம்ஸ்" , "டெக்கான் கிரானிக்கல்" ஆகிய பத்திரிகைகளை, இனி செய்தி வெளியிடும் போது அதன் உண்மை தன்மைகளில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய கவுன்சில், அவர்களுக்கு எதிரான புகார்களை தள்ளுபடி செய்தது.


இப்படிக்கு
ஊடக தொடர்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
புது டெல்லி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக