நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள எழில் மிகும் கிராமம், ர்ஜுக்கான்.
இதர பெரிய வசதிகள் ஏதுமற்ற இந்த கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஒர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டும் உண்டு.
இந்த உரத்தொழிற்சாலையையும், இப்பகுதியில் வளமான மண் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900-ம் ஆண்டு வாக்கில் வெறும் 300 பேர் இங்கு குடியேறினார்.
தற்போது சுமார் 3500 மக்கள் வசிக்கும் இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரிய ஒளியை சந்திக்க முடியாதபடி சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்தன.
இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த மார்ட்டின் ஆண்டர்சன் என்பவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடித்தார்.
சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத் நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அவர் அமைத்தார்.
8 1/2 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக