செவ்வாய், அக்டோபர் 29, 2013

ஒபாமாவின் டுவிட்டர் - பேஸ்புக் இணைப்புகள் முடக்கம்: 'சிரிய' ஹேக்கர்ஸ் கைவரிசை..

வாஷிங்டன், அக். 29- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர். 


இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர்.

அவர்கள் சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணையதளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில், 'உங்கள் நுழைகைக்கு நன்றி! ஒபாமாவின் அபாயகரமான பிரச்சார இணைப்புகளை நாங்கள் முடக்கியுள்ளோம்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சில மணி நேரங்களுக்கு இந்த இணைப்புகள் முடக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

சிலர் அதிபரின் இணைப்புகளை முடக்கியுள்ளனர். எனினும், இவற்றை நிர்வகிக்கும் கட்டுப்பாடு அவர்களின் கைகளுக்கு போகவில்லை. முடக்கப்பட்ட இணைப்புகளை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என அவர்கள் தெரிவித்தனர். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக