யன்கூன், மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் அங்கு அடிக்கடி கலவரங்கள் நடந்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு அங்கு கலவரம் ஏற்பட்டது. அதில் முஸ்லிம்கள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ராக்கின் மாகாணத்தில் கலவரம் ஏற்பட்டது. அதில், புத்த மதத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக சென்று முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள்.
அதில் 94 வயது முஸ்லிம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 70 வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இக்கலவரம் தாய்சங் நகரில் மூண்டது. அப்போது 800 பேர் அடங்கிய கும்பல் தெருக்களில் கூடி வன்முறை செயல்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கலவரம் மூண்ட ராக்கின் மாகாணத்தை மியான்மர் அதிபர் தெயின் செயின் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.
மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கலவரம் மூண்டது. அதில் இருந்து இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேறி அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக