சனி, அக்டோபர் 26, 2013

குஜராத் தனியார் பள்ளியில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதி மறுப்பு!

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் முஸ்லிம் மாணவி படிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருடைய தாயார், மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார்.
அஹமதாபாத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க விண்ணப்பித்த ஐந்து வயதான ஸஹீரா மோமின் என்ற மாணவிக்கு இந்த அவலம் நேர்ந்துள்ளது. பள்ளிக்கூட நுழைவு தொடர்பாக விளம்பரத்தை கண்டு ஸஹீராவின் பெற்றோர் பள்ளிக்கூடம் சென்றனர். பெயர் விபரங்களை கேட்ட பிறகு முஸ்லிம் மாணவர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது என்று பள்ளிக்கூட நிர்வாகிகள் கூறினர் என்று மாணவியின் பெற்றோர் புகாரில் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்கக் கூடாது என்பது பள்ளியின் கொள்கை என்று அவர்கள் கூறியதாக ஸஹீராவின் பெற்றோர் கூறுகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பள்ளிக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஹ்மதாபாத் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக