திங்கள், அக்டோபர் 21, 2013

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவியை நிராகரித்த சவூதி அரேபியா!

ஜித்தா: சவூதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்றஉறுப்புரிமை கிடைத்து ஒரு நாள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்துள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலின் இரட்டை நிலைப்பாடு காரணமாக அதனால் உலக அமைதிக்காகப் பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியே சவூதி அரேபியா அதன் உறுப்புரிமையை நிராகரித்துள்ளது.
 
பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சவூதி அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், என்ன வகையான சீர்திருத்தங்கள் என்ற விவரங்களை அந்நாடு வெளியிடவில்லை.
 
சிரியா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேசம் தவறியுள்ளதாக முன்னதாக சவூதி அரேபியா எச்சரித்திருந்தது. சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸதை எதிர்த்துப் போராடும் எதிர்ப்பாளர்களை சவூதி ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.
 
.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பினர்களுடன், சுழற்சி அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 உறுப்பு நாடுகளுமாக மொத்தமாக 15 நாடுகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக