ராமல்லா: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவம் இரண்டு ஃபலஸ்தீன்
இளைஞர்களை அநியாயமாக சுட்டுக் கொலை செய்துள்ளது.
ராமல்லாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கஃபர் நிஃமா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலை செய்யப்பட்ட 24 வயது நபர், ஃபலஸ்தீன் போராளி இயக்கமான இஸ்லாமிக் ஜிஹாதைச் சார்ந்தவர் என்று இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
இஸ்லாமிக் ஜிஹாதைச் சார்ந்த 3 பேரை கைது செய்ய கிராமத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம், இரண்டு பேரைக் கைது செய்தது. மூன்றாவது நபரை அநியாயமாக இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றது.
இச்சம்பவத்தை எதிர்த்து மக்கள் களமிறங்கியபோது இராணுவத்துடன் நடந்த மோதலில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், கைது செய்யும்போது தப்பித்த முஹம்மது அஸி என்பவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஷியோனிச இராணுவம் கூறுகிறது.
சில மணி நேரங்கள் கழித்து மேலும் ஒரு இளைஞரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றது. இவரைக் கொலை செய்ததற்கான காரணத்தை இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக