மீரட் : முஸஃப்பர்நகர் கலவரத்தை தூண்டிவிட்டதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத்சோம் என்பவர் உ.பி மாநில காவல்துறையால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியிருந்தார். கடந்த ஞாயிறன்று அவருடைய கைதுக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டமும் கலவரமும் செய்ததில் மேலும் ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.
சங்கீத் சோம் ஆதரவாளர்களின் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் காவலர் மீது கற்களை வீசித் தாக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதனால் அந்த இடமே போர்க்களம் ஆனது.
கிராம மக்களை ஆத்திரமூட்டிய அக்கூட்டம் வன்முறையிலும் ஈடுபட்டதால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வன்முறைக் கும்பலைக் கலைத்தனர்.
கிராம மக்களை ஆத்திரமூட்டிய அக்கூட்டம் வன்முறையிலும் ஈடுபட்டதால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வன்முறைக் கும்பலைக் கலைத்தனர்.
இக்கலவரத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். தொடர்பாக 50 - 60 பேர் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி மஞ்சித்சிங் கூறினார்.
தற்போது சங்கீத் சோம் உடைய மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் இதே வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுதித்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக