டெல்லி: எந்த அப்பாவி முஸ்லிம்களையும் கைது செய்யக் கூடாது என்று மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே அறிவுரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், குற்றம் செய்யாத அப்பாவி சிறுபான்மையினர், குறிப்பாக, முஸ்லிம்கள் யாரேனும் தவறுதலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அந்த அப்பாவிமக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், அதுபோன்று யாரும் சிறையில் இல்லை என்பதை உறுதி செய்யும்படியும் அனைத்து மாநில முதல்வர்களையும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார்.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தம் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், வேண்டும் என்றே தாம் குறிவைக்கப்படுவதாகவும் சிறுபான்மையின வாலிபர்கள் கருதுகின்றனர் ஆகவே, தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு தீவிரவாத வழக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும்.
தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாகக் கைது செய்யப்படக் கூடாது என்று தன் கடிதத்தில் அமைச்சர் தெளிவுறுத்தியுள்ளார்.
தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாகக் கைது செய்யப்படக் கூடாது என்று தன் கடிதத்தில் அமைச்சர் தெளிவுறுத்தியுள்ளார்.
.அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் காவல் அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் ஷிண்டே தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
உள்துறை அமைச்சரின் இந்த அறிவுரைக் கடிதத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக