திங்கள், செப்டம்பர் 30, 2013

வி.ஹெச்.பி.யை புறக்கணித்துவிட்டு தனியாக விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட உலக மத பாராளுமன்றம் முடிவு!

ஷிக்காகோ: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாட உலக மத பாராளுமன்ற அமைப்பு (சி.பி.டபிள்யூ.ஆர்.) முடிவு செய்துள்ளது.

 
ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளையான வி.ஹெச்.பி.ஏ. ஏற்பாடு செய்த விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை புறக்கணிக்க ஏற்கனவே சி.பி.டபிள்யூ.ஆர். தீர்மானித்திருந்தது.
 
இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள எந்த ஹிந்துத்துவா அமைப்புகளுடனும் தங்களுக்கு தொடர்பில்லை என்று வி.ஹெச்.பி.ஏ. கூறியிருந்தது.
ஆனால், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி (சி.ஏ.ஜி.) சி.பி.டபிள்யூ.ஆருக்கு எழுதிய கடிதத்தில் வி.ஹெச்.பி. ஏமற்றும் இந்தியாவில் உள்ள வி.ஹெச்.பி.க்கும் இடையேயான உறவுகளை விவரிக்கும் ஏராளமான ஆதாரங்களை குறிப்பிட்டிருந்தது.
 
பிரிவினையை தூண்டும் அமைப்புகளை புறக்கணிக்கவும், விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாடவும் சி.பி.டபிள்யூ.ஆர். எடுத்த முடிவை சி.ஏ.ஜி.யின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ராஜா சுவாமி பாராட்டியுள்ளார். வி.ஹெச்.பி.யின் இணையதளத்திலேயே வி.ஹெச்.பி.ஏ. என்பது தங்களது இணை அமைப்புதான் என்பதை குறிப்பிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரும் சுப்ரமணிய சுவாமிதான் வி.ஹெச்.பி.ஏ. ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முக்கிய உரையை நிகழ்த்தி உள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக