பங்களாதேஷில் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவருக்கு மரணத்தண்டனை அளித்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பால் எழுந்த எதிர்ப்பு வங்காள தேசத்தில் தொடருகிறது. எதிர்ப்பின் 2-வது நாளான நேற்று போலீசுக்கும், அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் நிலவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
டாக்காவில் இருந்து 143 மைல் தொலைவில் உள்ள முஜீப்நகரில் ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் மற்றும் போலீசுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த சுதந்திர போராட்டத்தில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டி ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் காதர் முல்லாவுக்கு உச்சநீதிமன்றம் மரணத்தண்டனை தீர்ப்பை அளித்தது. ஆனால், இத்தீர்ப்பு அரசியல் தூண்டுதல் என்று ஜமாஅத் விமர்சிக்கிறது.
போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்ட முழு அடைப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. புதன் கிழமை கல்வீச்சில் காயமடைந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் பலியானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக