மதுரையில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நாட்டில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை முன்னிட்டு, அந்த மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கியது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிக்கைகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத அமைப்பாக சித்தரித்து செய்திகள் வெளியிடப்பட்டன.
இது குறித்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பிடம் பாப்புலர் ஃபிரண்ட் புகார் செய்தது. அந்த புகார் குறித்து விசாரிக்க பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில், சம்பத்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு பிரஸ் கவுன்சில் தனது கண்டனத்தையும், இனிமேல் இது போன்று அவதூறு செய்திகள் வெளியிடக்கூடாது என்ற எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டது.
இத்தகைய செய்திகளுக்கு, மத்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பே காரணம் என்று சில செய்தித் தாள்கள் ஆதாரமாக கூறியிருந்தன. ஆனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், தீவிரவாத அமைப்பு என்றும் தாங்கள் தெரிவிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து மத்திய உளவுத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியன பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளன.
எனவே அதன் அடிப்படையில் மறுப்பு செய்தி வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக