வெள்ளி, நவம்பர் 08, 2013

மோடிக்கான விசா கொள்கையில் மாற்றமில்லை! -அமெரிக்கா

வாஷிங்டன்: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கான விசா கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் தெரிவிக்கையில்,தற்போதுள்ள விசா கொள்கையே தொடர்கிறது.

நரேந்திர மோடி அமெரிக்கா வர விரும்பினால், அவர் எல்லோரையும் போல் விசாவுக்காக விண்ணப்பிக்கலாம்'' என்று தெரிவித்தார்.
2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள நரேந்திர மோடி விசாவுக்காக விண்ணப்பித்தபோது, அதை அமெரிக்கா நிராகரித்தது. மக்களின் மதச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்ட வெளிநாட்டு அரசு அதிகாரிகள் அமெரிக்கா வருவதைத் தடைசெய்யும் குடியேற்ற மற்றும் நாட்டுரிமைச் சட்டத்தின்கீழ் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக