புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி இன்று திங்கட்கிழமை) மலேசியா வருகிறார். அவருடன் ரோடியர் மில் தலைவர் பாலன் உடன் செல்கிறார்.
முதல்–அமைச்சர் ரங்கசாமி மலேசியா நாட்டில் யாரை சந்திக்கிறார். எங்கெங்குசென்று பார்வையிடுகிறார் என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
அரசு முறை பயணம் இல்லாமல் தனிப்பட்ட பயணமாக முதல்–அமைச்சர் ரங்கசாமி வருவதாக கூறப்படுகிறது.
முதல்–அமைச்சர் ரங்கசாமி அரசு முறை பயணமாக மலேசியா செல்ல மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு இருந்தார். திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுலா குறித்து கண்டறிவதற்காக மலேசியா செல்வதற்காக ரங்கசாமி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் தனிப்பட்ட பயணமாக அவர் மலேசியா வருகிறார். 13–ந் தேதி ரங்கசாமி புதுவை திரும்புவார் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக