விஜய் டிவியில் பிரபலமான நிகழ்சிகளில் ஒன்று தான் “காப்பி விட் டிடி”. தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியினைத் தனக்கே உரிய சாயலில் மிகவும் அர்புதமாக நடத்தி வருகிறார்.ஒவ்வொறு வாரமும் பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்வர்.
இதனைப்போலவேஇவ்வாரம் 'கோச்சடையான்'படத்தினைவிளம்பரப்படுத்தும் விதமாகபடம் உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநனர் செளந்தர்யா ரஜினிகாந்த்பகிர்ந்து கொண்டார்.
அப்போது இந்த திரையுலகினரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று டி.டிகேட்டுவிட்டு, ஒவ்வொரு நடிகர் பெயராக குறிப்பிட்டுக் கொண்டே வந்தார்.அதில் சிம்புவின் பெயரை குறிப்பிடும் போது செளந்தயா "பாடாதே சிம்புநிறுத்திடு. ப்ளீஸ்" என்று குறிப்பிட்டார்.
அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன்,செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் திட்டிதீர்த்தார்கள்.
இச்செயல் குறித்து சிம்பு,"அனைவருக்குமே மற்றொருவரின்செயல் குறித்து விமர்சிக்க உரிமையுண்டு. ஆகையால், எனது ரசிகர்கள்இவ்வாறு செய்வது மிகவும் தவறு. மற்றவர்களையும் என்னை மதிப்பதுபோல மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் என் மீது வைத்திருக்கும்அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை நீங்கள் மற்றவரிகளிடமும் காட்டவேண்டும், நன்றி. என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறினார்.
சிம்புவை பற்றி கூறிய கருத்து குறித்து செளந்தர்யா, " சிறுவயதில்இருந்தே எனக்கு சிம்பு நண்பர் தான். நான் விளையாட்டாக தான்கூறினேன். எங்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லை என்றுகூறியுள்ளதோடு இவர் சிம்புவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக