செவ்வாய், ஜூன் 03, 2014

இந்தியத் தூதரகத்தின் மேலும் 3 அயலாக்க விசா மையங்கள்

மலேசியாவுக்கான இந்தியத் தூதரகம், மேலும் மூன்று விசா அயலாக்க (Outsource) மையங்களை அமைத்துள்ளது. ஈப்போ, சிரம்பான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் செயல்படும் இந்த அயலாக்க விசா மையங்கள்  ஜூன் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்மூலம், கோலாலம்பூர், பினாங்கு, மற்றும் ஜொகூர் மாநிலம் உட்பட மொத்தம் 6 இந்திய தூதரகத்தின் விசா அயலாக்க விசா மையங்கள் செயல்படும். மலேசியர்கள் இந்தியாவுக்குச் சுலபமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த அயலாக்க விசா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அயலாக்க அடிப்படையில் நாடுதழுவிய அளவில் அமைக்கப்பட்டுள்ள விசா மையங்களின் முகவரிகள் பின்வருமாறு:
1.         KUALA LUMPUR                :    G-01, Ground Floor, Straits trading Building, No. 2
                                                                       Lebuh Pasar Besar, 50050 Kuala Lumpur

2.         PENANG                         No. 105, Lebuh Chulia, 10200 Penang

3.         JOHOR BAHRU       :    Unit 10-13, 10th Floor, Menara TJB, No. 9 Jalan Syed Mohd
                                                      Mufti, 80000 Johor Bahru

4.         IPOH                          :     No.120, Jalan Sultan Yusuf, 30000, Ipoh, Perak   
                     
5.         MALACCA                :     No.2B, Jalan Temenggong, 75000 Melaka       
       
6.         SEREMBAN              :     Suite No. 10, Second Floor, Lucky Plaza, Jalan Dato Lee
                                                      Fong Yee, 70000 Seremban, Negeri Sembilan     

இந்த அயலாக்க விசா மையங்களைத் திறந்துள்ளது மூலம், இந்தியாவுக்கான விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பயோமெட்ரி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கோலாலம்பூருக்கு வரத் தேவையில்லை. அவர்கள் மேற்கண்ட முகவரியில் அமைந்துள்ள விசா மையங்களுக்குச் செல்லலாம்.

ஜூன் 2-ஆம் தேதி முதல் இந்திய விசாவுக்கான பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக