சிபுவில், மனநிலை பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் பணிப்பெண் ஒருவர் முதலாளி வீட்டுச் செல்லப் பிராணியான பூனையை உயிரோடு கடித்துத் தின்ற சம்பவம் அக்குடும்பத்திலுள்ளவர்களை உறைய வைத்துள்ளது.
திடீரென மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பணிப்பெண் கடந்த வியாழக்கிழமை தன் முதலாளி வீட்டுப் பூனையைக் உயிரோடு கடித்துத் தின்றுவிட்டு மீதத்தை வீட்டின் வெளியே தூக்கி வீசியுள்ளார்.
கடந்த இரு வாரங்களாக அப்பணிப்பெண்ணின் மனநிலையில் மாற்றம் தெரிந்ததைத் தொடர்ந்து, இதுபோன்ற செய்கையில் அவர் ஈடுபட்டது அவரது முதலாளி குடும்பத்தை அதிர்ச்சியடையச் செய்தது. இது குறித்து அப்பெண்ணிடம் அம்முதலாளி பேசியுள்ளார்.
“அவரிடம் நான் பேசிய போது, தான் தான் அந்த பூனையைத் தின்றுவிட்டதாக கூறினார்” என் முதலாளி தெரிவித்தார்.
பின்னர் வன்முறையாக நடந்துக்கொள்ளத் தொடங்கிய அவர், தன்னைக் கட்டிப்போடுமாறு வேண்டிக்கொண்டதாக அம்முதலாளி தெரிவித்தார்.
மறுநாள் அந்த அண்டை நாட்டு பணிப்பெண்ணை வீடு திரும்ப அனுமதியளித்ததாகவும் அவர் கூறினார். அன்றிரவு வீட்டு காரில் அப்பெண்ணை கட்டிப் போட்டுள்ளனர். மறுநாள் சாதாரணமாகக் காணப்பட்டதால், அப்பணிப்பெண்ணின் கட்டை அவிழ்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அன்று காலை 10.30 மணியளவில் அவருக்கு உணவு வாங்கித் தர கூட்டிச் சென்றுள்ளார். ஆனால் உணவு வாங்கித் தந்தவுடன் அப்பணிப்பெண் காரில் ஏற மறுத்ததுடன், வெறிப்பிடித்த நிலையில் காணப்பட்டதாக அம்முதலாளி தெரிவித்தார்,
பின்னர் வெறிப்பிடித்த நிலையில் ஓடிய அவர் காரினுள் ஏறி அதிலுள்ள பொருட்களை தூக்கி வெளியே வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை கைது சென்ற முயன்றபோது போலீஸ் அதிகாரியின் கையையும் அவர் கடித்துள்ளார். பின்னர் அப்பணிப்பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக