ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசு பதவியேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் கொலை, வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற குற்றங்கள் 25 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“புதிய அரசாங்கத்தின் உணர்வற்ற தன்மை காரணமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. பழிவாங்கும் பாதையில் முதல்வர் வசுந்தரா ராஜே செல்வதால் பொதுமக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று பைலட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக