நேற்று பின்னிரவில், மந்தினில் உணவகம் ஒன்றில் உலகக் கிண்ணப் போட்டியின் நைஜீரியா, மற்றும் அர்ஜெண்டினா அணிகள் களமிறங்கிய ஆட்டத்தை 100க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நுழைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தலை தெறிக்க ஓடினர்.
நேற்று பின்னிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற அந்த அதிரடி ஆட்டத்தில் 38 ஆண்கள், மற்றும் மூன்று பெண்கள் முறையான ஆவணங்களைக் கொண்டிருக்காததால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 41 அந்நிய நாட்டவர்களில் 31 பேர் நைஜீரியர்கள், 3பேர் வங்காளதேசம், மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள். 2 பேர் உகாண்டா, மற்றும், 1 நேபாள், 1 சாம்பியா நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக