சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின், நிலப்பரப்பின் மேல் அடுக்கில், தென்மேற்கு பருவக்காற்று வடகிழக்கு நோக்கி வேகமாகவும், கனமாகவும் வீசுவதால், மேகங்கள் கலைவதுடன், வங்க கடல் பகுதியில் உள்ள ஈரக்காற்று நிலப்பரப்பை நோக்கி வீசுவதில்லை.
நிலப்பரப்பின், மேல் அடுக்கில் வீசும் காற்றின் வேகமும், கடினத்தன்மையும் குறையும் போது, தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு பருவ மழையின் சாரல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக