வியாழன், ஜூன் 19, 2014

ராஜினாமா செய்ய மாட்டேன்: கற்பழிப்பு புகாரில் சிக்கிய மத்திய மந்திரி பிடிவாதம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரியாக பதவி வகிப்பவர், நிஹால்சந்த் மேக்வால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார்.
நிஹால்சந்த் மேக்வாலும் அவருடன் சேர்ந்து மேலும் 16 பேரும் தன்னை கற்பழித்து, நாசப்படுத்தி விட்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரனை நடத்திய போலீசார், புகாரை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விசாரனையை முடித்துக்கொண்டனர்.

இதை எதிர்த்து, நிஹால்சந்த் மேக்வால் மற்றும் 16 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜெய்ப்பூர் கோர்ட்டில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய மந்திரி நிஹால்சந்த் மேக்வால் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, 'கற்பழிப்பு குற்றவாளியான ஒருவர் மத்திய மந்திரியாக பதவியில் இருப்பதா? உடனடியாக தனது மந்திரி பதவியை நிஹால்சந்த் மேக்வால் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியினரும், மகளிர் அமைப்புகளும் ராஜஸ்தானில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நிஹால்சந்த் மேக்வால், 'மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக