செவ்வாய், ஜூன் 24, 2014

விஷ்ணு அவதார அட்டைப்பட விவகாரம்: டோனிக்கு கைது வாரண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிசினஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம் வெளியிட்டது. இந்த அட்டைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிசத் தலைவர் ஷியாம் சுந்தர் அனந்தபூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஆஜராகும்படி டோனிக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சம்மனை யாரும் பெற்றுக்கொள்ளாததால் திரும்பி வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டோனியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், டோனியை ஜூலை 16-ம் தேதி ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேபோல் டோனிக்கு எதிராக டெல்லி, புனே மற்றும் சில நகரங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக