செவ்வாய், ஜூன் 10, 2014

ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியலைப் பரப்பக் கூடாது- கல்வி அமைச்சு

ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. மாறாக அச்செயலானது ஆசிரியர் தொழில் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என கல்வி இயக்குனர் டத்தோ டாக்டர் காயிர் முகமது யூசோப் தெரிவித்தார்.

ஒரு தனிப்பட்ட குழு சார்ந்த கருத்துக்களை வெளியிடுவதால், அது ஆசிரியர் தொழில் மீதான நன்மதிப்பைச் சீர்குலைப்பதாய் அமையும் என  அவர் தெரிவித்தார்.
ஒரு ஆசிரியர் எப்போதுமே தன் பணியின் தன்மையினையும், கடமையினையும் உணர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்துதல் வேண்டும். இந்நிலையில் அவர்கள் நடுநிலையுடன் செயல்படுவது அவசியம் என்பதை கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கு உணர்த்த கடமைப்பட்டுள்ளது.

“பொதுச் சேவை ஊழியர்கள் என்ற வகையில், ஆசிரியர்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்வதையே முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இதில் ஒருதலைபட்சமாகக் நடந்துகொள்ளக் கூடாது” என இன்று வெளியிட்ட அறிக்கை மூலம் டத்தோ டாக்டர் காயிர் முகமது யுசோப் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக