இந்தியாவின் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே காலமானார்.
இவர் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜக மூத்த தலைவர்களில் ஒருவராவார். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக அமைக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை டெல்லி விமான நிலையம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயமடைந்த கோபிநாத் முண்டே மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி ஏய்ம்ஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக